கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம்
ADDED :4106 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து திருபவித்ரோத்சவ வழிபாடு நடந்து வருகிறது. தொடர்ந்து 5 நாள் நடக் கும் வழிபாட்டில் அங்குரார்பனம், வாஸ்துசாந்தி, பவித்ர பிரதிஷ்டை, யாகசாலை ஹோமம் நடத்தப்படுகிறது. @நற்று முன்தினம் நடந்த துவக்க விழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடத்தி, மகா பூர்ணாஹூதி, பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருள், பிரம்மகோஷம், சாற்றுமுறை வழிபாடுகள் நடந்தது. வழிபாடுகளை தேசிக பட்டர் செய்தார். விழா ஏற்பாடுகளை திரைப்பட இயக்குனர் முருகதாஸ் மற்றும் நகர மக்கள் செய்துள்ளனர்.