திருப்பதி திருமலையில் ஸ்ரீரங்கம் ஜீயர் வழிபாடு!
ADDED :4048 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, நேற்று, ஸ்ரீரங்கம் ஜீயர் வழிபட்டார். ஸ்ரீரங்கம், ஆண்டவன் ஆசிரமத்தைச் சேர்ந்த, ஜீயர் ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள், நேற்று, திருமலைக்கு வந்தார். ஏழுமலையான் கோவில் முன் வாசல் அருகில், அவருக்கு அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள், மரியாதை அளித்து வரவேற்றனர். பின், கொடி மரத்தை வலம் வந்த அவர், தன் சீடர்களுடன் ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார்.