தஞ்சையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரகதீஸ்வரர் வீதி உலா!
ADDED :3994 days ago
தஞ்சாவூர்: ராஜராஜ சோழன், 1029வது ஆண்டு சதய விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பிரகதீஸ்வரருக்கு, 48 வகையான அபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா நிறைவாக, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.