சபரிமலை கோவிலில் மண்டல பூஜை: புதியவிதி அமல்!
ADDED :3993 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன்கோவில் மண்டல பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 41 நாட்கள் பூஜைக்கு பிறகு டிசம்பர் 27-ம் தேதி நிறைவுபெறுகிறது.அதன் பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படும். மேலும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்சிறுமிகள் போட்டோ ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனவும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வயது குறித்த போட்டோ ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தான கமிஷனர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.