பக்தருக்கு சாட்டையடி நேர்த்திக்கடன்; மாரியம்மன் விழா!
ராசிபுரம் : அத்திப்பலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்களை பூசாரி சாட்டையால் அடிக்கும் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடந்தது.ராசிபுரம் அடுத்த, அத்திப்பலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி ஸ்வாமிக்கு, சிறப்பு அலங்காரம், பூவோடு எடுத்தல், சாட்டையடி திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கோவில் பரிகாரத்தை உருளுதண்டம் போட்டனர். பின்னர், நேர்த்திக்கடன் செலுத்த, கோவில் பூசாரி மணி மற்றும் ராஜாவிடம், பக்தர்கள் வரிசையில் நின்று சாட்டையடி பெற்றனர். இவ்வாறு சாட்டையடி பெற்றால், பில்லி, சூனியம், தீராத நோய்கள் நீங்கும்.திருமணம், குழந்தை பிறப்பு தடை, தொழில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று ஸ்வாமி சக்தி அழைத்தல், மாவிளக்கு பூஜை, அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை உடற்கூற்று வண்டிவேடிக்கை, எருதாட்டம் நிகழ்ச்சியும், வரும், 7ம் தேதி இரவு, கம்பம் எடுத்தல், 8ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ராசிபுரம் மாரியம்மன், செல்லியாண்டிம்மன், ஆஞ்சநேயர் கோவில்களில், பூவோடு எடுத்து வருதல் நடந்தது. இதில், கோவில் பூசாரி பூவோடு எடுத்துவர, பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஸ்வாமியை வழிபட்டனர்.