உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாற்கடல் குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு!

திருப்பாற்கடல் குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு!

சிதம்பரம் : சிதம்பரத்தில், திருப் பாற்கடல் குளம் சீரமைப்பு பணிக்காக மண் தோண்டிய போது, கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் குளம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்து ஆலய பாதுகாப்பு குழு முயற்சியால், குளத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, சீரமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று, குளத்தின் மேற்கு கரையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, மண்ணில் புதைந்து இருந்த, இரண்டரை அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட, கற்சிலை ஒன்று கிடைத்தது. அச்சிலை, கை கூப்பி வணங்கிய நிலையில் உள்ளதால், அது, மாணிக்க வாசகர் சிலையாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. இதற்கு முன், இக்குளத்தில், விநாயகர், அம்மன் போன்ற பல சிலைகள் கிடைத்து உள்ளன. கண்டெடுக்கப்பட்ட கற்சிலையை, அண்ணாமலை பல்கலைக் கழக கல்வெட்டு பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !