உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்காவலில் திருப்பணி ரூ.1.5 கோடியில் திட்ட மதிப்பீடு

திருவானைக்காவலில் திருப்பணி ரூ.1.5 கோடியில் திட்ட மதிப்பீடு

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக, 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகள் செய்வதற்கான மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் உள்ள பஞ்சபூத நீர்த்தளமான ஜம்புகேஸ்வரரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில், கடந்த, 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், கோவிலில் திருப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி, கோவில் உதவி ஆணையர் கண்ணையாவிடம் அறிவுறுத்தி இருந்தார். கோவில் திருப்பணிக்கான மதிப்பீடு செய்யும் பணியை, அலுவலர்கள் துவக்கினர். அம்மன் சன்னதி விமானத்தில், பொம்மைகள் புதுப்பித்து, வண்ணம் தீட்டுதல், ஆரியபடாள் வாசல் கோபுரம், மேற்கு ராஜகோபுரம் புனரமைக்க உள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் பிரகாரம், மடப்பள்ளி மேல்தளம் தட்டோடு பதித்தல், மதில் சுவர் பணிகள், சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ள, 1.5 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு செய்துள்ளனர். திட்ட மதிப்பீடு தயார் செய்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !