உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிநவ மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம்!

அபிநவ மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம்!

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம் நடந்தது. விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர்., நகரில்  உள்ள ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு ராகவேந்திரர்  சுவாமிக்கு சங்கல்பம், புன்யாவசனம், வாஸ்து மண்டல பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு மரத்திற்கு வஸ்த்ரம், கந்த புஷ்ப அலங்காரம்,  ஹோமம், மரத்தை சுற்றி பலி தானம், 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 9:30  மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !