புவனகிரி வேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
ADDED :3953 days ago
புவனகிரி: புவனகிரியில் ஸ்ரீ மீனாட்சி உடனுறை வேதபுரீஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கு (லிங்கத்திற்கு) அஸ்த நட்சத்திரத்தில் அன்ன அபிஷேகம் நடந்தது. அதேப்போன்று மீனாட்சி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பெருமாத்துõர், புவனகிரி பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.