சாலிவரதேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :4099 days ago
நாகர்கோவில் : நாகர்கோவில் வடசேரி வஞ்சி ஆதித்தன் புதுத்தெருவில் சாலிவரதேஸ்வரர் கோயிலில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி 1008 சங்காபிஷேகம், கணபதிஹோமம், சுதர்சனஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. வடசேரி பகுதி அதிமுக சார்பில் இந்த வழிபாடு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் பச்சைமால், நாஞ்சில் முருகேசன், மாவட்ட அவை தலைவர் சதாசிவம்,பால்வளத்தலைவர் அசோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.