ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4099 days ago
அரியலூர்: அரியலூர், ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில், 900 ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பிரஹன்நாயகி உடனமர் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி, 20 லட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்கள் நடந்த யாகசாலை பூஜைக்கு பின், கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல், தா.பழூர் பஞ்., யூனியன் சேர்மன் ஜெயசுதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாதுரை மற்றும் பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.