தருமம் செய்!
ADDED :4118 days ago
ஒருவர் தன் பேரப்பிள்ளையிடம் கை நிறைய தின்பண்டங்களை தந்த பிறகு, பேராண்டி.... பேராண்டி... எனக்கு ஒரு லட்டு தா! எனக் கேட்கிறார். இதில் சூட்சுமம் என்ன வெனில், இது அவர் சாப்பிடக் கேட்டதல்ல, தனது பேரன் தான் கேட்டால் தருகிறானா? என சோதிப்பதற்குத்தான். சில குழந்தைகள் தந்து விடும். சில குழந்தைகள், ஊஹும்.. தரமாட்டேன் எனக் கூறும். இதுபோலத்தான் இறைவன் நமக்கு எண்ணற்ற செல்வங்களைத் தந்து, தருமம் செய்யச் சொல்கிறான். தந்தால் விருத்தி தருகிறான். தராவிட்டால் தரித்திரத்தைப் பரிசாகத் தருகிறான்.