உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் - தகவல்

பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் - தகவல்

தலம்: பசுவந்தனை

சிறப்பு: சங்கு ஸ்வாமிகள் சமாதி கோயில்

இருப்பிடம்: கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ தொலைவில்  இருக்கிறது.  பசுவந்தனை.  மதுரை நெல்லை ரயில் மார்க்கத்தில்  கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவு.  மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ தொலைவு.  தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்
வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவு.

செல்லும் வழி: பகவந்தனைக்கு அருகில் உள்ள நகரம் கோவில்பட்டி, தமிழகத்தின் அனைத்து  பகுதியில்  இருந்தும் கோவில்பட்டியை அடைவது எளிது.  கோவில்பட்டி, நெல்லை,தூத்துக்குடி முதலான ஊர்களில் இருந்து பகவந்தனைக்குப் பேருந்து  வசதி உண்டு.  என்றாலும் பேருந்து சர்வீஸ் குறைவாகவே உள்ளது.

தொடர்புக்கு: அருள்மிகு கயிலாதநாத ஸ்வாமி திருக்கோயில்.
பகவந்தனை-625 718.
ஒட்டப்பிடாரம் வட்டம்.
தூத்துக்குடி மாவட்டம்.
போன்:0461-2282308.               


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !