தியாகதுருகம் கிரிவல பாதையை சீரமைக்க கோரிக்கை!
ADDED :3990 days ago
தியாகதுருகம்: தியாகதுருகம் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையை புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தியாகதுருகம் நகரின் மையப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க மலை உள்ளது. இதன் மீது மேற்கு பகுதியில் நுõற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் அம்மனுக்கு பவுர்ணமி தினத்தில் சிறப்பு பூஜை செய்து மலையை சுற்றி கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபட்டு வரு கின்றனர். இதற்காக மலையை சுற்றிலும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறிக் கிடக்கிறது. இதனால் நடந்து செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. இச்சாலையை புதுப்பித்து மீண்டும் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.