கப்பூர் செய்தருளீஸ்வரர் சிவன் கோவிலில் உழவாரப் பணி!
விழுப்புரம்: கப்பூர் செய்தருளீஸ்வரர் சிவன் கோவிலில் உழவாரத் திருப்பணி நடந்தது. விழுப்புரம் அடுத்த கப்பூர் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செய்தருளீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. கடந்த சில ஆண்டிற்கு முன் மர்ம நபர்கள் சிலர் இக்கோவிலுக்கு சொந்தமான பொ ருட்களை திருடிச் சென் றுள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் மக்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் கோவில் பூட்டப்பட்டு சில ஆண்டுகளாக பூஜைகள் செய்யாமல், கோவில் வளாகம் முழுவதும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. தகவலறிந்த புதுச்சேரி முதலியார்பேட்டை, சிவத்தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி முன்னிலையில் நேற்று இந்த கோவிலில் உழவாரத் திருப்பணி நடந்தது. இதில் புதுச்சேரி அண் ணாமலையார் கிரிவலக் குழுவினர், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர், காடாம்புலியூர், கிழக்கு மருதூர் மற்றும் அனைத்து திருக்கூட்டத்தின் சார்பில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு உழவாரப் பணியை öŒ#தனர். இக்குழுவினர் ஊராட்சி தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பூட்டிய கோவிலை திறந்து பூஜைகள் செய்வது மற்றும் புதிய கட்டடப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்தனர்.