உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர்கள் ஊர்வலம்!

ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர்கள் ஊர்வலம்!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில், ராமாயண வரலாறு நிகழ்வுகளை ஆன்மீக பாடல்கள், உரையாடலுடன் விளக்கும், சொற்பொழிவு உ.பி., வாரணாசியைச் சேர்ந்த சுவாமி ராம்கமல் தாஸ் வேதாந்தி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உ.பி., ம.பி., டில்லி, அரியானா மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். நேற்று அவர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கலசத்தில் புனித நீரை எடுத்துக்கொண்டு கோயில் ரதவீதி, திட்டகுடி வழியாக ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் தனியார் லாட்ஜ்களில் முன்பதிவு செய்து தங்கியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சீதாராம் தாஸ் பாபா, பா.ஜ.., தேசிய பொது குழு உறுப்பினர் முரளீதரன், ராமாயண கதா ஒருங்கிணைப்பாளர் முருகன், கோசுவாமி மடம் மேலாளர் ராமசுப்பு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !