கார்த்திகை தீப விளக்கு விற்பனை விறுவிறுப்பு!
ADDED :3985 days ago
பாரிமுனை: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, விதவிதமான தீப விளக்கு விற்பனை, பாரிமுனையில் சூடு பிடித்துள்ளது. திருக்கார்த்திகை தீப விழா, வரும் டிச., 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு பாரிமுனை, தங்கசாலை உள்ளிட்ட பகுதிகளில், விதவிதமான தீப விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது. ஐந்து ரூபாய் முதல், 200 ரூபாய் வரையுள்ள விளக்குகள், விற்பனைக்கு வந்துள்ளன. விநாயகர் முகத்துடன் கூடிய, ஐந்து மற்றும் 11 விளக்குகள், லட்சுமி முகத்துடன் கூடிய விளக்கு, துளசிமாட விளக்கு, குபேர விளக்கு என, பல விதங்களில், களிமண் மற்றும் டெரகோட்டா வகைகளில், விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.