கச்சபேஸ்வரர் கோவில் இன்று தெப்போற்சவம்
ADDED :3986 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், 55 ஆண்டுகளுக்கு பின், தெப்போற்சவம் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாக, கச்சபேஸ்வரர் கோவிலும் விளங்கி வருகிறது. இக்கோவிலில், பெருமாள் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம். இந்த கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில், கடந்த 55 ஆண்டுகளுக்கு முன், தெப்ப உற்சவம் நடந்தது. அதன் பின், தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இந்த கோவில் தாயார் குளத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. தற்போது 55 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு, கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில், தெப்போற்சவம் இன்று துவங்கி மூன்று நாள் நடக்கிறது. இன்று மாலை, 6:00 மணியளவில், சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருள்வார்.