உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா பணிகள் மும்முரம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா பணிகள் மும்முரம்

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழாவை ஒட்டி, தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தில் ஆலங்காட்டீசர் சென்றாடு தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா, வரும் 20ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, நடக்கிறது.தெப்பத்தில், வண்டார்குழலியம்மை உடனுறை வடாரண்யேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில், குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தெப்பலில், பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.கடந்த மூன்று நாட்களாக, 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தெப்பம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை மாலைக்குள், தெப்பம் கட்டும் பணிகள் முழுமையாக முடிவடையும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !