உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் கூடுதல் லட்டு கவுன்டர்!

திருமலையில் கூடுதல் லட்டு கவுன்டர்!

திருமலையில், நேற்று, இரண்டு கூடுதல் லட்டு கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இதை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ திறந்து வைத்தார். திருமலையில், தற்போது வரை, நான்கு கூடுதல் லட்டு வழங்கும் கவுன்டர்கள் உள்ளன. ஆனால், வாரஇறுதி விடுமுறை நாட்களிலும், சிறப்பு விழா நாட்களிலும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். அதனால், அவர்கள் நீண்ட நேரம் கூடுதல் லட்டுகளை பெற, வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்களின் சிரமத்தை குறைக்க, தேவஸ்தானம் நேற்று, கூடுதலாக இரண்டு லட்டு கவுன்டர்களை திறந்து வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !