கார்த்திகை மாதபிறப்பு: பழநியில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள்
ADDED :3988 days ago
பழநி : கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு பழநி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலையணிந்தனர். பாதவிநாயகர்கோயில், திருஆவினன்குடிகோயில், கிரிவீதி ஐயப்பன் கோயில்களில் குருசுவாமி மூலம் பக்தர்கள் அதிகாலையில் மாலையணிந்தனர். ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்காக காதி வஸ்திரலாயம் மற்றும் ஜவுளி கடைகளிலும் வழக்கமான துணிகளை விட புளூ, கருப்பு நிறக்காவி ஆடைகள், துளசிமணிமாலை, பாசிமணிகள், இருமுடி பைகள் விற்பனைக்கு வந்துள்ளது. கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு மாலை அணிவதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் காவி வேஷ்டி, துண்டுகளை வாங்கிச்சென்றனர். வேஷ்டி, துண்டு, மாலைகளின் விலை கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.