ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா துவக்கம்!
ADDED :3984 days ago
குளித்தலை : குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வர் கோவிலில், கார்த்திகை மாதம் சோமவார விழா துவங்கியது. கார்த்திகை சோமவாரம் மூலவருக்கு, வைரமுடி சாத்தி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.சோமவாரத்தை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் குடிபாட்டுகாரர்கள் திரளாக வந்து, 1,017 படிகள் கொண்ட மலை உச்சியில் ஏறி, ரத்தினகிரீஸ்வரர் சமேத சுரும்பார் குழலியை தரிசித்து சென்றனர். 3, 4வது சோமவாரம் சிறப்பாக நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.