அக்னீஸ்வரருக்கு அயுதநாமாவளி அர்ச்சனை!
ADDED :3984 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி சவுந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரருக்கு, மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு, "சாம்ப சதாசிவ அயுதநாமாவளி என்ற, 10 ஆயிரம் அர்ச்சனை செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது.சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, 10 ஆயிரம் அர்ச்சனைகள் வில்வம் மற்றும் புஷ்பங்களால் செய்யப்பட்டு மதியம், 1 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது.