உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் அவதரித்த விழா!

முத்துமாரியம்மன் அவதரித்த விழா!

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், அம்பாள் அவதரித்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. அம்பாள் அவதரித்த 59ம் ஆண்டு நாளான நேற்று காலை 8 மணிக்கு 1008 பால்குடம் எடுத்து அம்பாளுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். காலை 11 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலாஜி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !