உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதத்தில் கடுமை ஏன்!

விரதத்தில் கடுமை ஏன்!

ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இதனை திரிகரணசுத்தி என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது. பிரம்மச்சர்யம் கடைபிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !