வீரராகவர் கோவிலில் வனபோஜன மஹோத்ஸவம்!
ADDED :4149 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் தானப்ப நாயக்கன் மண்டபத்தில், வீரராகவ பெருமாளின், வன போஜன மஹோத்ஸவம் நேற்று, நடந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வனபோஜன மஹோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா, நேற்று நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவ பெருமாள், நேற்று காலை 7:00 மணிக்கு, தானப்ப நாயக்கன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.அங்குள்ள கோ சாலையில் கோபூஜை நடந்தது. பகல் 11:00 மணிக்கு, திருமஞ்சனமும், மாலை 4:30 மணிக்கு, சாற்றுமறை தீர்த்த பிரசாத கோஷ்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு, விசேஷ வாத்ய வாண வேடிக்கையுடன் பெருமாள் திரும்புகால் புறப்பாடு நடைபெற்றது. சுற்று வட்டார மக்கள் திரளானோர் நிகழ்ச்சியில் பங்கேற்று, உற்சவர் வீரராகவரை வழிபட்டனர்.