திருப்பதி ஏழுமலையான் திருவடிகளுடன் தாயார் உலா!
ADDED :3999 days ago
திருப்பதி: திருச்சானூரில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின், ஆறாம் நாளான நேற்று காலை, பத்மாவதி தாயார் சர்வ பூபால வாகனத்தில், வெண்ணெய் திருடும் கண்ணனாக வலம் வந்தார். பின், மதியம் தாயாருக்கு, மூலிகை கலந்த நீரால், ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று மாலை, தங்கத்தேரில், பத்மாவதி தாயார் மாடவீதியில் வலம் வந்தார். இந்த தங்கத்தேரை, பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு 8:00 மணிக்கு, பத்மாவதி தாயார், கருட வாகனத்தில், ஏழுமலையானின் திருவடிகளை பொருத்திக் கொண்டு, மாடவீதியில் வலம் வந்தார். கருட சேவைக்காக, திருமலையில் இருந்து ஏழுமலையானின் திருவடிகள் மட்டும், திருச்சானூருக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.