வாழ்வில் வளம் பெற என்ன செய்ய வேண்டும்?
ADDED :4132 days ago
ஒரு லட்சுமி படத்தை நம் முன்னால் வைத்துக் கொண்டு, அம்மா! தாயே பணத்தைப் போடு என்றால் தரமாட்டாள். உழைப்பு...உழைப்பே வாழ்வை வளப்படுத்தும். அவ்வாறு உழைத்துச் சேர்க்கும் பணம் நமக்கும் இன்னும் முகம் தெரியாத நாலு பேருக்கும் நம்மால் முடிந்தளவுக்கு பயன்பட வேண்டும். இதற்கு ஆண்டவனின் கருணை வேண்டும். உங்களின் இஷ்டதெய்வத்தை வணங்கி விட்டு வேலையைக் கவனமாகப் பாருங்கள். வளம் நிச்சயம்.