வாரத்தின் முதல்நாள் ஞாயிறு ஏன்?
ADDED :5229 days ago
வாரநாட்கள் நவக்கிரக கணக்கில் கொண்டே வரையறுக்கப்பட்டுள்ளன. வாரத்தின் முதல்நாளாக ஞாயிற்றுக்கிழமை உள்ளதற்கும், நவக்கிரக நாயகனான சூரியனுக்கும் தொடர்பு உள்ளது. சூரியனே நவக்கிரகங்களில் முதன்மையானவராக உள்ளார். சூரியனுக்கு ஞாயிறு என்றும் பெயர் உண்டு. ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என சூரியனைப் பற்றி குறிப்பிடுகிறது சிலப்பதிகாரம். எனவே, வாரத்தின் முதல்நாளாக ஞாயிற்றுக் கிழமை உள்ளது.