உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை 18ம் படியேற்றுவதில் .. கூட்டம் அதிகமானால் 1 நிமிடத்துக்கு 110 பேர்!

சபரிமலை 18ம் படியேற்றுவதில் .. கூட்டம் அதிகமானால் 1 நிமிடத்துக்கு 110 பேர்!

சபரிமலை : சாதாரண நிலையில் ஒரு நிமிடத்துக்கு 30 பேரும், கூட்டம் மிக அதிகமானால் 110 பேரும் 18-ம் படியில் ஏறுவதற்கு போலீசாருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரையில் ஒரு முக்கிய கட்டம் 18-ம் படியில் ஏறி கோயிலக்கு செல்வது. லேசான சாய்வு மட்டுமே உள்ள இந்த படியில் ஏறுவதற்கு போலீசாரின் உதவி கண்டிப்பாக தேவை. இதற்காக போலீசார் ‘ஷிப்ட்’ முறையில் இங்கு பணியில் அமர்த்தப்படுகின்றனர். சாதாரண நேரங்களில் 15 நிமிடத்துக்கு 10 பேர் பணியில் இருக்கின்றனர். கூட்டம் அதிகமாகும் போது 10 நிமிடத்துக்கு ஒரு முறை 10 பேர் மாறி மாறி பணியில் வருவர். இவர்கள் பக்தர்களை கை பிடித்து மேலே ஏற்றி வருவர். இதில் குழந்தைகளையும், முதியவர்களையும் கவனமாக கையாள வேண்டியிருக்கும். சாதாரண நேரங்களில் ஒரு நிமிடத்துக்கு 30 பேர் படியறே முடியும். கூட்டம் அதிகமாகும் போது இது 90-ஆக அதிகரிக்கும். கூட்டம் கட்டுக்கடங்காமல் மிக அதிகமாக இருக்கும் போது 110 பேர் வரை படியேற்றப்படுவார்கள். இவ்வாறு செய்யும் போது பக்தர்களின் புகார்களும் வரும். ஆனால் காட்டில் காத்திருக்கும் பக்தர்கள் தரிசனம் நடத்த வேண்டுமெனில் போலீசார் சற்று வேகமாகதான் செயல்பட வேண்டியுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு விருதுகளும் வழங்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் போலீஸ் தனி அதிகாரியாக எஸ்.பி. வல்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !