உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை பெருமாள் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்பிக்கும் வைபவம்!

கோட்டை பெருமாள் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்பிக்கும் வைபவம்!

ஈரோடு: ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில், டிச., 2ம் தேதி, 365 வஸ்திரங்கள் சமர்பிக்கும் வைபவம் நடக்க உள்ளது.வைணவ கோவில்களில், மிக முக்கிய வைபவங்களில் கைசிக ஏகாதசியும் ஒன்று. ஸ்ரீமந்நாராயணனுக்கு, வஸ்திரங்களால் ஏற்படும் குறைகள் நிவர்த்திக்காக, கைசிக ஏகாதசி வழிபாடு செய்யப்படுகிறது. அன்றைய தினம், ஈரோடு கோட்டை ஸ்ரீகஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், காலை, 6 மணிக்கு திருமஞ்சனமும், மாலை, 6 மணிக்கு, 365 வஸ்திரங்கள் சமர்பிக்கும் வைபவமும், கைசிக பாராயணம் வாசிக்கப்படும்.இந்த பூஜையில் பங்கேற்பதால், நாம் பாவத்தில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை, ஸ்ரீஎம்பெருமானர் நித்ய கைங்கர்ய டிரஸ்ட் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !