உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கீழக்கரை: கீழக்கரை அருகே அலவாய்க்கரைவாடி கிராமத்தில் உள்ள கருப்பட்டி முனீஸ்வரர் கோயில் என்ற இலந்தை மரக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ., 26 ல், முதற்கால யாகவேள்வியுடன் பூர்ணாகுதி, அங்குரார்பணம், யந்திர பிரதிஷ்டையுடன் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு சந்திரசேகர சாஸ்திரி, ரகுராமசந்திரன் சாஸ்திரி ஆகியோர் வேதமந்திரங்கள் முழங்க, புனிதநீரை கும்பத்தில் ஊற்றினர். பின்னர், மூலவரான கருப்பட்டி முனீஸ்வரர், விநாயகர், ஆஞ்சனேயர், பத்திரகாளி, கருப்பண்ணசுவாமிகள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா பரஞ்ஜோதி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !