உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாளிகைப்புறம் கோயிலில் ஆசாரங்களை மீறாதீர்: மேல்சாந்தி வேண்டுகோள்!

மாளிகைப்புறம் கோயிலில் ஆசாரங்களை மீறாதீர்: மேல்சாந்தி வேண்டுகோள்!

சபரிமலை: ’சபரிமலை மாளிகைப்புறம் கோயிலில் மஞ்சளை தூவியும், துணிகளை வீசியும் ஆசாரங்களை மீறக்கூடாது’ என பக்தர்களுக்கு மேல்சாந்தி கேசவன் நம்பூதிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பக்தர்கள் கொண்டு வரும் இருமுடி கட்டில் ஒரு முடியில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் தேங்காய் மற்றும் பச்சரிசி போன்ற பொருட்கள் இருக்கும். இரண்டாவது முடியில் அவல், பொரி, மஞ்சள், குங்குமம், திருநீறு, பன்னீர் போன்ற பொருட்கள் இருக்கும். பக்தர்கள் மஞ்சள் பொடியை மாளிகைப்புறத்தம்மன் கோயில் பகுதி, அதன் பின்னால் உள்ள நாகர் பிரதிஷ்டைகளில் தூவுகின்றனர். குங்குமத்தை நவக்கிரக மண்டபத்தை சுற்றி தூவுகின்றனர். இது ஆசாரங்களுக்கு எதிரானது என்று மாளிகைப்புறம் மேல்சாந்தி கேசவன் நம்பூதிரி கூறியுள்ளார். அவர் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்கள் ஆசாரங்களுக்கு விரோதமாக நடக்கக்கூடாது. மாளிகைப்புறத்தம்மனுக்கு கொண்டு வரும் பொருட்களை தேவிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இங்கு மஞ்சள், குங்குமம், திருநீறு போன்றவற்றை தூவுவது, கோபுரத்தின் மீது பிளவுஸ் துணிகளை வீசுவது போன்றவை ஆசாரங்களுக்கு எதிரானது. ஆடைகளை கோயிலில் சமர்ப்பித்தால் போதும். அதை தந்திரியோ, மேல்சாந்தியோ தேவிக்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !