உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தேர் பளிச்!

திருப்பரங்குன்றம் தேர் பளிச்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான, 16 கால் மண்டபம் அருகே நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத்தேர் புதுப்பிக்கும் பணி முடிந்து பளபளவென காட்சி தருகிறது. இத்தேர் கார்த்திகை தீப திருவிழா, தெப்பத்திருவிழாவில் ரத வீதிகளில் வலம் வரும். இரண்டரை டன் எடையும், 12 அடி உயரம், 12 அடி அகலமும் கொண்ட இத்தேர் உபயதாரர் மூலம் ரூ.6 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. டிச., 5ல் தேரோட்டம் முடிந்த பின் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்படும்.

குன்றத்து தெய்வானை: திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பக்தர் ஒருவரால் அசாமிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆறரை வயது பெண் யானைக்குட்டி நேற்று முறைப்படி கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. அதற்கு தெய்வானை என பெயர் சூட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !