வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார சிறப்பு ஹோமம்!
ADDED :3976 days ago
திருக்கோவிலுõர்: திருக்கோவிலுõர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகைமாத மூன்றாவது சோமவார திங்கள் கிழமையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலசஸ்தாபனம் நடந்தது. 108 சங்கு பூஜை, ரு த்ரஜபம், ருத்ரஹோமம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகியது. மூலவர் வீரட்டேஸ் வரருக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், மகா அபிஷேக ங்கள், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மாலை 7.00 மணிக்கு ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்த ருளி ஆலய பிரதட்சணம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.