நந்திக்கு முன்மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை!
ADDED :4065 days ago
திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சிவன் கோவிலில் நந்திக்கு முன்மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தென்மங்கலம் புவனேஸ்வரி சமேத சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு நான்கு லட்சம் ரூபாய் மதி ப்பில் முன்மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. காலை 7:20 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. தமிழ்முறைப்படி 108 மூலிகைகளால் சிறப்பு பூஜைகளும், 12 திருமுறை வேள்விகளும் நடந்தன. வேள்விகளை முருகன் நடத்தினார். கலசம் புறப் பாடாகி மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் பூமி பூஜை நடந்தது. ஊராட்சி தலைவர் கரிகாலன், மார்த்தாண்டன், உதயக்குமார், ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.