பழநி ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தம்!
பழநி: பழநி மலைக்கோயில் மெட்டீரியல் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக இன்றுமுதல் நிறுத்தப்பட உள்ளது. பழநிமலைக்கோயில் தெற்குகிரிவீதி நகராட்சி குடிநீர்தொட்டி அருகே மெட்டீரியல் ரோப்கார் இயக்கப்படுகிறது. இதன்மூலம் நாள்தோறும் ஒருமணிநேரத்திற்கு ஒன்றரை டன் அளவுக்கு பஞ்சாமிர்த டப்பாக்கள் மலைக்கோயிலுக்கு ஏற்றிச்செல்லப் படுகிறது. இந்த ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் சில நாட்கள் நிறுத்தப்பட உள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மெட்டீரியல் ரோப்காரில் புதிதாக 500 மீட்டர் நீளத்திற்கு கம்பிவடக்கயிறு பொருத்தபட்டு பராமரிப்புபணிகள் மேற்கொள்ள உள்ளோம். இப்பணியை டிச.,5க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மலையில் பஞ்சாமிர்த டப்பாக்கள் இருப்பு உள்ளது. இருந்தாலும் இரவுநேரத்தில் வின்ச்மூலம் பஞ்சாமிர்த டப்பாக்கள் மலைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது, என்றார்.