வடபழனி கோவிலிலும் சூரிய ஒளி மின்சக்தி!
ADDED :3974 days ago
வடபழனி: வடபழனி முருகன் கோவிலில், சூரியஒளிமின்சக்தி மூலம் மின்சார பெறுவதற்கான சாதனங்கள், ௧௩.௫௦ லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. கந்த அனுபோதி மண்டபத்தின் மேற்கூரையில், அதற்கான மின் தகடு அமைக்கும் பணி விரைவில் துவங்கும்; வரும்,பிப்ரவரிக்குள் இந்த பணி நிறைவு பெறும்.இதன்மூலம், ௩௦ சதவீத மின்சாரம் சேமிக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில்களிலும், ௧௦ கிலோ வாட், மின்திறன் கொண்ட, சூரியஒளி மின் சக்திக்கான சாதனங்கள் அமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.