பழநி கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு
பழநி : பழநிகோயில்லை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை இன்று திட்டமிட்டப்படிநடக்கும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சீசனை முன்னிட்டு பழநிகோயில் கிரிவீதிகள், பாதவிநாயாகர் கோயில் வின்ச் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், பழக்கடைகள் என நூற்றுக்குமேற்பட்ட வியாபாரிகள் குவிந்துள்ளனர். இவர்களால் பக்தர்களுக்கு அடிக்கடி இடையூறுகள் ஏற்படுவதாக கோயில்நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதனால் இன்று கிரிவீதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகம் அறிவிப்பு செய்துஇருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுவண்டி, பழக்கடை வைத்துள்ள நூற்றுக்குமேற்பட்ட வியாபாரிகள், மார்க்சிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளுடன் பழநிகோயில் தலைமை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.இதுதொடர்பாக பழநி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மாரியப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கிரிவீதியில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், கோர்ட் உத்தரவுப்படி இன்று அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா, டி.எஸ்.பி., சண்முசுந்தரம், நகராட்சி கமிஷனர் முஜிபுர்ரஹ்மான், நகரமைப்பு அலுவலர் விமலா உட்பட பலர் பங்கேற்றனர்.