உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தியாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்தியாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாமல்லபுரம்: பூஞ்சேரி, முத்தியாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. மாமல்லபுரம் அடுத்த, பூஞ்சேரியில், முத்தியாலம்மன் கோவில் உள்ளது. இவ்வூர் கிராம தேவதை கோவிலாக, பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. பழமையான இக்கோவிலுக்கு, திருப்பணி செய்ய முடிவெடுத்த பகுதிவாசிகள், மூலவர் அம்மன் சன்னிதிக்கு விமானம், மகா மண்டபம் ஆகியவற்றை புதிதாக அமைத்தும், அம்மன் முழு உருவ சிலையை புதிதாக பிரதிஷ்டை செய்தும், மகா மண்டபத்தில் ஜேஷ்ட சிலைகள் அமைத்தும், திருப்பணி செய்தனர். அதைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேகத்திற்காக, கடந்த 29ம் தேதி காலை, மகா கணபதி ஹோம வழிபாடு துவங்கி, நேற்று காலை வரை நான்கு கால பூஜை நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, சன்னிதி விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !