உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மகா தீப.. ராட்சகொப்பரைக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை மகா தீப.. ராட்சகொப்பரைக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா 5ம் தேதி நடைபெறுகிறது. 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு ராட்சகொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கு முன் கோவில் நடந்த சிறப்பு பூஜையில், கோவில் பசு மற்றும் யானை வணங்கியது. பின்னர் ராட்சகொப்பரையை கோயில் ஊழியர்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

பிரம்மாவுக்கு நன்றி:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை நல்லபடியாக நடத்திய  பிரம்மாவிடம் பெரிய தேர் முன் குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், எழுந்தருளி நன்றி தெரிவித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !