உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் நாளை மாலை மகா தீபம்!

திருவண்ணாமலையில் நாளை மாலை மகா தீபம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, எட்டாம் நாள் விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தி.மலை., மலையில், நாளை மாலை, மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் கொப்பரை, நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் கோபுரம் ஆகியவை, வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. தீப திருவிழாவை முன்னிட்டு, நாளை (டிச., 5) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !