திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம்!
ADDED :4040 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைமேல் நாளை(டிச., 5) கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு இன்றிரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
நாளை காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். டிச.,6ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.கார்த்திகை தீபத்திற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை கோயிலில் தயாராக உள்ளது. 300 லிட்டர் நெய்யில் 150 மீட்டர் காடா துணியை திரியாக்கும் பணி நடக்கிறது. திருவண்ணாமலையிலிருந்து தீப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.