ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் 108 போர்வை சாத்தும் நிகழ்ச்சி!
ADDED :3966 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று 108 போர்வை சார்த்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு திருவோண மண்டபத்தில் ஆண்டாள் , ரெங்கமன்னார், வடபத்ரசாயி, ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் ஆகியோர் எழுந்திருளினர். குளிர்காலம் துவங்குவதையொட்டி சுவாமிகளுக்கு 108 புடவைகள் சார்த்தப்பட்டு வேதபிரான் பட்டர் சுதர்சனன் கவுசிக புராணம் படித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.