உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

பழநி கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

பழநி : பழநி மலைக்கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை சீசன், கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிச., 6 ஐ முன்னிட்டு பழநிகோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மலைக்கோயில் தங்ககோபுரம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ‘ரோப்கார்’, படிப்பாதை, வின்ச் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பழநிகோயிலுக்கு செல்லும் முக்கியரோடுகளான அடிவாரம், கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, கொடைக்கானல் ரோடு, பை-பாஸ் ரோடு போன்ற பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். பழநி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில்,‘ சபரிமலை சீசனை முன்னிட்டு பழநிகோயிலில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் உட்பட 30 பேர் பணியில் உள்ளனர். டிச.,6 ஐ முன்னிட்டு இன்று முதல் கூடுதலாக 10 போலீசார் மற்றும் 15 ஊர்க்காவல் படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோயிலுக்கு வரும் முக்கிய ரோடுகளில் வாகனதணிக்கை நடத்தப்படுகிறது,’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !