உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் வைகை நிற்கும்!

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் வைகை நிற்கும்!

மதுரை: ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு டிச., 29 முதல் 2015 ஜன., 2 வரை மதுரை-சென்னை வைகை ரயில்கள்(12635/12636) ஒரு நிமிடம் நின்று செல்லும். ஏற்கனவே விழுப்புரத்தில் யார்டு பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா காரணமாக டிச., 4, 5 தேதிகளில் மதுரை-விழுப்புரம் பயணிகள் ரயில்கள்(56706/56705) விருத்தாச்சலம்-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படாது. சென்னை-மதுரை வைகை ரயில்கள் வழக்கமான நேரப்படி இயங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !