மூலநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பாகூர்: கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், வரும் 8ம் தேதி, 1008 சங்காபிஷேக விழா நடக்கிறது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை 3வது சோமவாரத்தை முன்னிட்டு, வரும் 8ம் தேதி 1008 சங்காபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி, காலை 6.00 மணிக்கு விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகர், சன்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு கலச ஸ்தாபன பூஜை, சிவ சகஸ்கரநாம அர்ச்சனை, சிறப்பு ஹோமம் நடக்கிறது. 10.30 மணிக்கு 1008 சங்குகளால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 12.00 மகா தீபாரதனை நடக்கிறது. சங்காபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தீய சக்திகளின் தொல்லைகள் நீங்கி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்துள்ளனர்.