உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலுக்கு புதிய நிர்வாக குழு தேர்வு

செல்வ விநாயகர் கோவிலுக்கு புதிய நிர்வாக குழு தேர்வு

புதுச்சேரி: சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலுக்கு புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனர். நைனார்மண்டம் சுதானா நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், ஊர் பொதுமக்கள் கூட்டம் நடந்தது. இதில், கோவிலுக்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். பாஸ்கர் எம்.எல்.ஏ., கவுரவ தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராக சத்தியராஜ், தலைவராக தண்டபாணி, துணை தலைவர்களாக சிவமுத்துவேலன், பாப்பையா, செயலாளராக கதிர் முத்துரத்தினம், துணை செயலாளர்களாக ராஜாராம், கிருஷ்ணமூர்த்தி, மகாலிங்கம், பொருளாளராக பாலசுப்ரமணியன், சட்ட ஆலோசகராக கலியபெருமாள், மக்கள் தொடர்பாளர்களாக ராமலிங்கம், நந்தகோபால், பாலு, ஜெயசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !