உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்

அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்

கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். கள்ளக்குறிச்சி சித்திவிநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள அய்யப்பன் சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு சித்தி விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அய்யப்பனுக்கு 108 வகை திரவியங்கள் மற்றும் பல்வேறு வண்ண மலர்களால் அபிஷேக ஆரா தனைகள் செய்தனர். நிகழ்ச்சியில் அன்னதானம் வழங் கப்பட்டது. முருகேசன் குருக்கள் தலைமையிலான அய்யப்ப பக்தர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !