உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூரில் ஐயப்பன் கோவில்கள் இடிப்பால் பதட்டம்!

வேலூரில் ஐயப்பன் கோவில்கள் இடிப்பால் பதட்டம்!

வேலூர்: வேலூரில், இரு ஐயப்பன் கோவில்கள் இடிக்கப்பட்டதால், பதட்டம் ஏற்பட்டுள்ளது. வேலூர் அடுத்த சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அதே பகுதியை சேர்ந்த சிலர் குடிசை போட்டு வசித்து வந்தனர். மேலும் இவர்கள், அப்பகுதியில் ஐயப்பன் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பினர். அவர்கள், ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், ஐயப்பன் கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை, ஆக்கிரமிப்பாளர்கள் துவங்கினர். இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் பாண்டியராஜன் முன்னிலையில், ஐயப்பன் கோவில் அகற்றப்பட்டது. இதேபோல், செல்வவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான கொணவட்டத்தில் கட்டப்பட்டிருந்த, மற்றொரு ஐயப்பன் கோவிலும் அகற்றப்பட்டது.இதை கண்டித்து, ஹிந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் மகேஷ், கோட்ட பொருளாளர் பாஸ்கள், ஆதிமோகன் உள்பட, 50க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று, சாலை மறியல் செய்தனர். வேலூர் டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் தலைமையில், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !